விண்ணில் இன்று பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்; தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
விண்ணில் இன்று பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்; தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் , ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகின்றன.

இஸ்ரோ சார்பில் இந்த ஆண்டிற்கான இறுதி திட்டத்தின்படி, பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று ஏவப்பட உள்ள சூழலில், தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி தமிழக மீன்வள துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com