5வது மாடியில் இருந்து குதித்து மனநல மருத்துவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5வது மாடியில் இருந்து குதித்து மனநல மருத்துவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த மனநல மருத்துவர் ஹேமிகா (வயது 40). இவர் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் வசித்து வந்தார்.

இதனிடையே, குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் கணவருடன் விவாகரத்து பெற்ற ஹேமிகா அடுக்குமாடி குடியிருப்பில் தனியே வசித்து வந்தார். விவாகரத்துக்குப்பின் ஹேமிகா கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மருத்துவர் தற்கொலை

இந்நிலையில், வீட்டில் இருந்த ஹேமிகா நேற்று இரவு 7வது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த ஹேமிகாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஹேமிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். 7வது மாடியில் இருந்து கீழே குதித்து மனநல மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com