படுக்கையறை, குளியலறையில் ரகசிய கேமிரா பொருத்திய சைக்கோ கணவர்; கண்டுபிடித்த மனைவி; அடுத்து நடந்த சம்பவம்

படுக்கையறையில் எடுத்த மனைவியின் அந்தரங்க காட்சிகளை வைரலாக்கி விடுவேன் என கணவர் மிரட்டியிருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.
புனே,
மராட்டியத்தில் மாநில அரசு துறையின் 2-ம் நிலை பணியாளராக 31 வயது பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர், வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்.
காருக்கு தவணை பணம் கட்டுவதற்கு ரூ.1.5 லட்சம் தேவையாக இருந்துள்ளது. அதனால், அந்த தொகையை பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டு வரும்படி தொடர்ந்து மனைவியை வற்புறுத்தி வந்திருக்கிறார். உடல் மற்றும் மனரீதியான இந்த துன்புறுத்தல் பல நாட்களாக நீண்டுள்ளது. இவருடைய கணவரும் அரசு ஊழியர் ஆவார்.
இந்நிலையில், மனைவிக்கு தெரியாமல் அவருடைய நடவடிக்கையை கண்காணிப்பதற்காக படுக்கையறையில் ரகசிய கேமிரா ஒன்றை கணவர் பொருத்தியிருக்கிறார்.
இதேபோன்று, குளியலறையிலும் கூட கேமிரா வைத்து மனைவியை கண்காணித்து இருக்கிறார். ஒருமுறை குளியலறையில் இருந்த ரகசிய கேமிராவை கவனித்த அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். படுக்கை மற்றும் குளியலறையில் ரகசிய கேமிரா இருப்பது அறிந்து அதிர்ந்த அந்த அரசு ஊழியர், சைக்கோவாக நடந்து கொண்ட அவருடைய கணவரே இதற்கு காரணம் என்று அறிந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து கணவர், கணவரின் தாயார், கணவரின் 3 சகோதரிகள் மற்றும் சகோதரிகளின் 2 கணவர்கள் ஆகியோருக்கு எதிராக அம்பேகாவன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வரதட்சணை வாங்கி வரும்படி கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிரட்டி வந்ததுடன், அப்படி பணம் கொண்டு வரவில்லையெனில், படுக்கையறையில் எடுத்த மனைவியின் அந்தரங்க காட்சிகளை வைரலாக்கி விடுவேன் என கணவர் மிரட்டியிருக்கிறார் என்று போலீசார் நேற்று தெரிவித்தனர்.






