பி.டி.ஆர். ஆடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பி.டி.ஆர். ஆடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

30 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும், அரசியல் காரணங்களுக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள். கிரிமினல் சட்டவிதிகளின் கீழ் போதிய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று இருக்கும்போது, நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமாக பயன்படுத்தக் கூடாது என மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com