இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு..!

கடந்த 10 மாதங்களுக்கு முன் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்து இருந்தது.
இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு..!
Published on

புதுடெல்லி,

பிஜிஎம்ஐ எனப்படும் பப்ஜி மொபைல் விளையாட்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது.

எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த சுமார் 10 மாதங்களாக பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com