கோவாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

தேர்தலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படுவதாக கோவா அரசு அறிவித்துள்ளது.
கோவாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
Published on

பனாஜி,

கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியும், கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் கோவாவில் சட்டசபை தேர்தலையொட்டி, வரும் 14 ஆம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக, கோவாவில் வரும் 14 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com