மக்கள் நலத் திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது- அசோக் கெலாட்

வளர்ந்த நாடுகளில் ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு வாரம்தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அசோக் கெலாட் கூறினார்.
மக்கள் நலத் திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது- அசோக் கெலாட்
Published on

ஜெய்பூர்,

பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மக்களுக்கான நலத்திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசோக் கெலாட் கூறுகையில், " வளர்ந்த நாடுகளில் ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு வாரம்தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது. மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது. ராஜஸ்தானில், ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இதுபோன்ற திட்டங்களை இலவசம் என்று கூற முடியாது" என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com