சர்வதேச பயணிகளுக்கான தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: அரசு அறிவிப்பு

கல்வி, பணி உள்ளிட்ட விசயங்களுக்காக வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது.
சர்வதேச பயணிகளுக்கான தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலாக உள்ள சூழலில் இந்தியாவில் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கல்வி, வேலை மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் விளையாட்டு வீரர்கள் உள்பட வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுபோன்ற பயணிகள் தங்களுடைய பாஸ்போர்ட் உடன் கோவின் சான்றிதழ்களை இணைக்க வேண்டும். கோவிஷீல்டு போன்ற கொரோனா தடுப்பூசி வகை பற்றி அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

வெளிநாடு செல்லும் இந்திய பயணிகள், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இவை தவிர்த்து வேறு எந்த தகுதிக்கான விவரங்களையும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com