புதுச்சேரியில் தொடர் பைக் திருட்டு: 3 பேர் கைது

மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் திருடி வைத்திருந்த 8 பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்.
பைக் திருட்டு: 3 பேர் கைது
Published on

புதுச்சேரி,

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு புதுச்சேரியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி, சேதராப்பட்டு அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கைது

விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபு (39), பாலமுருகன் (40) மற்றும் வெங்கடேசன் (23) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் ஆடம்பரமாக வாழ்வதற்காகப் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் திருடி வைத்திருந்த 8 பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com