

புதுச்சேரி,
புதுச்சேரியில் வெப்ப அலை காரணமாக வருகிற 27-ம்தேதி முதல் மே 31-ந்தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் 27-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் மே 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ அல்லது வேறு எந்த வகுப்புகளோ நடத்தப்படக்கூடாது.
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.