புதுச்சேரி சட்டசபை தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உடன்பாடு ஏற்பட்டும் தொகுதி பிரிப்பதில் ஏற்பட்ட சிக்கலால் காங்கிரஸ், தி.மு.க.வினர் 30 தொகுதிகளிலும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் தங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை என்றும் வலியுறுத்தி வந்தன.

இதனால் கூட்டணியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. வேட்புமனு தாக்கலுக்கு நேற்று இறுதி நாள் ஆகும். இருப்பினும் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாததால் இரு கட்சிகளும் 30 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியது. உடன்பாடு ஏற்பட்ட பின்னர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி 30 தொகுதிகளிலும் காங்கிரஸ், தி.மு.க.வினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ், தி.மு.க. இடையே எந்தெந்த தொகுதி என இறுதி செய்வது குறித்து நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் 14 இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்யபட்டது. அதையடுத்து பேச்சுவார்த்தை முடிவில் இரு கட்சியினரும் கைக்குலுக்கிக் கொண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 13 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூட்டணி கட்சியான வி.சி.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முழு விவரம்:-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com