புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 15-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு அங்குள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் தொடர்பான பணிகளை ஆய்வு செய்வதற்காக அண்மையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்தனர். அவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி புதுச்சேரியில், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com