மக்களுடன் அமர்ந்து ‘ஜெயிலர் 2’ படம் பார்த்த புதுச்சேரி முதல்வர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!

முதலமைச்சர் தியேட்டருக்குள் வந்து படம் பார்க்கும் இந்த எளிய நிகழ்வை அங்கிருந்த ரசிகர்கள் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.
மக்களுடன் அமர்ந்து ‘ஜெயிலர் 2’ படம் பார்த்த புதுச்சேரி முதல்வர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!
முதலமைச்சர் என். ரங்கசாமி- ஜெயிலர்-2 திரைப்படம்
Published on: 

புதுச்சேரி,

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார்.

எளிமையான முறையில் வருகை

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் பிரபல திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் அண்மையில் வெளியாகியானது. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) தனது நண்பர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அந்த திரையரங்கிற்கு சென்றார். மேலும், அவர் எவ்வித சிறப்பு சொகுசு ஏற்பாடுகளும் இன்றி சாதாரண ரசிகர்களைப் போல மக்களோடு மக்களாக இருக்கையில் அமர்ந்து திரைப்படத்தை ரசித்துப் பார்த்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

முதலமைச்சர் என்.ரங்கசாமி தியேட்டருக்குள் வந்து படம் பார்க்கும் இந்த எளிய நிகழ்வை அங்கிருந்த ரசிகர்கள் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் பாராட்டு

முதலமைச்சராக இருந்தபோதிலும், எவ்வித ஆடம்பரமும் இன்றி மக்களுடன் எளிமையாக கலந்து படம் பார்த்த ரங்கசாமியின் இந்த செயலை ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

X