விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் 3 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தால் விடப்பட்ட 3 நாட்கள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் 3 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் கேடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தெடங்கியதன் காரணமாக மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு முன்கூட்டியே கேடை விடுமுறை வழங்க வேண்டும் என மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி (28-04-2025) முதல் ஜூன் 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தால் முன்னதாகவே விடப்பட்ட கோடை விடுமுறை தினமான 3 நாட்கள் (ஏப்ரல் 28, 29, 30ம் தேதிகள்) விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 2, 30ம் தேதி மற்றும் நவம்பர் 15ம் தேதி ஆகிய நாட்களில் (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com