புதுச்சேரி கவர்னர் மாளிகைக்குள் மதுபோதையில் மாணவர் நுழைந்த விவகாரம் - தலைமை காவலர் சஸ்பெண்ட்

பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக ஆயுதப்படை காவலர் வசந்தராஜா பணிநீக்கம் செய்யப்பட்டார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்குள் மதுபோதையில் மாணவர் நுழைந்த விவகாரம் - தலைமை காவலர் சஸ்பெண்ட்
Published on

புதுச்சேரி,

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஹிருத்திக் என்பவர், மது போதையில் புதுச்சேரி கவர்னர் மாளிகையின் சுவற்றில் ஏறி உள்ளே நுழைந்து, அங்குள்ள அறையில் படுத்து தூங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னர் மாளிகையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக ஆயுதப்படை காவலர் வசந்தராஜா பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தலைமை காவலர் ஆனந்தவேலுவை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com