புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ்-11, பா.ஜ.க.-6 விருப்ப மனு தாக்கல்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சர்பில் 11 பேரும், பா.ஜ.க. சார்பில் 6 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ்-11, பா.ஜ.க.-6 விருப்ப மனு தாக்கல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் மாதம் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், சுற்றுலாத்துறை இயக்குனருமான முகமது மன்சூரிடம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 30ந்தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1ந்தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்பப்பெற விரும்புபவர்கள் அக்டோபர் 3ந்தேதி பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்

அக்டோபர் 21ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 24ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதனிடையே, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சர்பில் 11 பேரும், பா.ஜ.க. சார்பில் 6 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com