

புதுச்சேரி,
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 105 சாராய கடைகளும், 96 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கலால் துறை மூலம் ஆன்லைன் வாயிலாக முழுமையான ஏலம் விடப்படுகிறது.
கடையை ஏலம் எடுத்தவர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகையை உயர்த்தி தொடரலாம். அதன்படி புதுவை பகுதியில் 14 சாராயக்கடைகள், 15 கள்ளுக்கடைகள், காரைக்கால் பகுதியில் 11 சாராயக்கடைகள், 6 கள்ளுக்கடைகள் குத்தகை உரிமம் புதுப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குத்தகை உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள 80 சாராயக்கடைகளுக்கு 22 -ந் தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 75 கள்ளுக்கடைகளுக்கு அன்று பிற்பகல் 3 மணி முதல் 4 http://exciseportal.py.gov.in/Auction என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் ஏலம் நடக்கிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் வரும் 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் உரிய விண்ணப்ப படிவத்தை துணை ஆணையர் (கலால்) வசம் அதற்கு உரிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கலால் துறை ஆணையர் விக்ராந்த் ராஜா தெரிவித்துள்ளார்.