புதுச்சேரியில் இன்று மேலும் 2,783 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் இன்று மேலும் 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று மேலும் 2,783 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 10 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,342 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,073 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,30,392 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 13,053 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com