புதுச்சேரியில் பரபரப்பு: பச்சிளம் பெண் குழந்தை கழிவுநீர் வாய்க்காலில் வீச்சு...!

காரைக்கால் அருகே பச்சிளம் பெண் குழந்தை கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் பரபரப்பு: பச்சிளம் பெண் குழந்தை கழிவுநீர் வாய்க்காலில் வீச்சு...!
Published on

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திப்படுகை கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகில் கழிவுநீர் கலந்த வாய்க்காலில் பிறந்த அரை மணி நேரமே ஆன, பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டு உள்ளது.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருநள்ளாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் திருநள்ளாறு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், பச்சிளம் குழந்தையை வாய்க்காலில் யார் வீசியது என்பது குறித்து அப்பகுதி பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் திருநள்ளாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com