புதுச்சேரி: சிறுமியை கடித்துக்குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி நகர் பகுதியில் உள்ள நடைபாதையில் இன்று சிறுமி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை அங்கிருந்த தெருநாய் ஒன்று கடித்து குதறியது
தெருநாய் கடித்ததில் சிறுமிக்கு ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் தெருநாயை விரட்டி சிறுமியை மீட்டனர். பின்னர், சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






