புதுச்சேரி: வேளாண் துறை அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியது

புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அதிர்ஷ்டவசத்தில் அவர் உயிர் தப்பினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதிக்கு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், காரில் சென்றுள்ளார். அவருடன் காரில், அவருடைய உதவியாளர் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் சென்றுள்ளனர்.
அப்போது, பூச்சிக்கடை அருகே சென்றபோது, அந்த கார் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது. எனினும், இந்த விபத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் உள்பட 5 பேரும் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவரை கட்சி உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
Related Tags :
Next Story






