புதுச்சேரியின் நீர் தேவைக்காக நதிகள் இணைப்பு தேவை: துணைநிலை கவர்னர்

தென்மண்டல கவுன்சிலில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் இடம்பெற்றன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்- மந்திரிகள், தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

அப்போது அவர், புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைத்தல், விமான நிலைய விரிவாக்கம், புதுச்சேரியின் நீர் தேவைக்காக இந்திராவதி- கிருஷ்ணா- பெண்ணை- காவிரி நதிகள் இணைப்பு மற்றும் கோதாவரி- வராகநதி- தென்பெண்ணை நதிகள் இணைப்பு, தமிழ்நாடு வழியாக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டு வருதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com