காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் காயம் அடைந்தார். பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com