

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாமில் நேற்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் பலியாகினர். இருவர் காயம் அடைந்தனர். தாக்கிய 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது பயங்கரவாதியும் கொல்லப்பட்டான் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் தொடர்பாக சிஆர்பிஎப் சிறப்பு டிஜி எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் பேசுகையில், தேடுதல் வேட்டையானது தொடர்ந்து நடந்து வருகிறது.
தேடுதல் வேட்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக பயங்கரவாதிகள் யாரேனும் மறைந்து இருந்தால் அவர்களையும் அழிக்க வேண்டும். காஷ்மீரை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர், இன்று வெளிநாட்டை சேர்ந்த ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான் என கூறிஉள்ளார்.