புனே மாடல் அழகி தற்கொலை வழக்கு; கணவர் கோர்ட்டில் சரண்

திவிஷாவின் உடலுக்கு இரண்டாவது முறை பிரேத பரிசோதனை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புனே மாடல் அழகி தற்கொலை வழக்கு; கணவர் கோர்ட்டில் சரண்
Published on

மும்பை,

மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் திவிஷா சர்மா(வயது 31). இவருக்கு வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. அதன் பிறகு திவிஷா, மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கணவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபலா சிங் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணவர் வீட்டில் தூக்கு போட்டு துவிஷா தற்கொலை செய்து கொண்டார். திவிஷாவின் உயிரிழப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே, திவிஷாவின் கணவர் சமர்த் சிங் தலைமறைவானார். அவரது மாமியார் கிரிபாலா சிங், முன் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, திவிஷாவின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டபடி, அவரது உடலுக்கு இரண்டாவது முறை பிரேத பரிசோதனை மேற்கொள்ள கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக தேடப்பட்டு வந்த திவிஷாவின் கணவர் சமர்த் சிங் இன்று ஜபல்பூர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். மேலும், சமர்த் சிங்கை சட்டப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com