மாணவிகளின் உள்ளாடை நிறம் பற்றி விதிகள் பிறப்பித்த பள்ளி கூடத்திற்கு எதிராக பெற்றோர் போராட்டம்

புனேவில் உள்ள பள்ளி கூடம் ஒன்று மாணவிகளின் உள்ளாடை நிறம் பற்றி வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளின் உள்ளாடை நிறம் பற்றி விதிகள் பிறப்பித்த பள்ளி கூடத்திற்கு எதிராக பெற்றோர் போராட்டம்
Published on

புனே,

மகாராஷ்டிராவின் புனே நகரில் மேயீர்ஸ் எம்.ஐ.டி. பள்ளி கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளி நிர்வாகம் மாணவிகள் பள்ளிக்கு அணிந்து வரும் உள்ளாடையின் நிறம் மற்றும் ஸ்கர்ட்டின் நீளம் ஆகியவை பற்றி விதிகளை அறிவித்துள்ளது.

இங்கு மாணவிகள் கழிவறைக்கு செல்வதற்கும் குறிப்பிட்ட நேரம் தவிர்த்து பிற நேரங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி பெற்றோரில் ஒருவர் கூறும்பொழுது, மாணவிகள் வெள்ளை அல்லது தோல்நிற உள்ளாடை அணிய வேண்டும் என கூறுகின்றனர். மாணவிகள் அணியும் ஸ்கர்ட் நீளம் பற்றியும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இவை மாணவிகளின் பள்ளி டைரியில் எழுதப்பட்டு உள்ளது. அவற்றில் நாங்கள் கையெழுத்து இட வேண்டும் என்றும் கூறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதனை கடைப்பிடிக்க தவறினால் மாணவி மற்றும் பெற்றோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் பள்ளி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த பள்ளியின் செயல் இயக்குநர் சுசித்ரா கரட் கூறும்பொழுது, பள்ளி டைரியில் குறிப்பிட்ட உத்தரவுகளை தந்ததன் நோக்கம் தூய்மையானது. கடந்த காலங்களில் எங்களுக்கு சில அனுபவங்கள் ஏற்பட்டன. அதனாலேயே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com