புனேயில் 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: அஜித்பவார்

புனேயில் 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அஜித்பவார் அறிவித்து உள்ளார்.
புனேயில் 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: அஜித்பவார்
Published on

பிற பகுதிகளில் திறப்பு

மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்த மாத முதல் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு மாநிலத்தில் நோய் பரவல் குறைந்தது. மேலும் ஒமைக்ரானும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதையடுத்து மாநிலத்தில் மும்பை உள்பட அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மும்பையில் மழலையர் பள்ளிகள் திறக்க கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல மாநிலம் முழுவதும் வரும் 1-ந் தேதி முதல் கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் புனே மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.

1-ந் தேதி முதல் திறப்பு

இந்தநிலையில் வரும் 1-ந் தேதி முதல் புனேயில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி அஜித்பவார் கூறுகையில், புனேயில் வரும் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாள் மட்டும் வகுப்புகள் நடைபெறும். 9-ம் வகுப்புக்கு மேல் மற்றும் கல்லூரிகளுக்கு முழுநாள் வகுப்புகள் நடைபெறும். எனினும் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புவது குறித்து பெற்றோர் இறுதி முடிவு எடுத்து கொள்ளலாம். ஆனால் நிர்வாகம் பள்ளிகளை திறக்கும். இதேபோல கல்லூரி மாணவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி போட நடமாடும் வேன்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம் என்றா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com