பெண் மந்திரிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை - கல்லூரி மாணவர் கைது

பா.ஜ.க. பெண் மந்திரிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய புனேவைச் சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
பெண் மந்திரிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை - கல்லூரி மாணவர் கைது
Published on

மும்பை,

மராட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் மந்திரி ஒருவருக்கு சமீபத்தில் முன்பின் தெரியாத நபரிடம் இருந்து ஆபாச குறுந்தகவல்கள் வந்தன. மேலும் அந்த நபர் அடிக்கடி போன் செய்து மந்திரிக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகி நிகில் பாம்ரே மாநில சைபர் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பெண் மந்திரிக்கு தொல்லை கொடுத்தவர் புனே போசரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவா அமோல் காலே (24 வயது) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் மும்பை அழைத்து வந்து பெண் மந்திரிக்கு தொல்லை கொடுத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com