3 வருடம் திருமணம் செய்து கொள்ளாமலேயே காதலியுடன் ஒன்றாக குடித்தனம்; சந்தேகத்தால் ஐடி ஊழியர் செய்த அதிர்ச்சி சம்பவம்

நள்ளிரவு 12 மணி அளவில் ஹிஞ்சவாடி பகுதியில் உள்ள கோமல் தஹாலே தங்கி இருக்கும் விடுதியில் உள்ள அறைக்கு திரும்பினர்.
சந்தேகத்தால் ஐடி ஊழியர் செய்த அதிர்ச்சி சம்பவம்
Published on: 

புனே,

மராட்டிய மாநிலம் புனே அருகே வர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோமல் -தஹாலே (வயது27). கிழக்கு மராட்டியம் புல்டானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷூபம் கல்பாண்டே. கோமல் தஹாலே புனேவில் உள்ள 'விப்ரோ' நிறுவ - னத்திலும், ஷூபம் கல் பாண்டே இன்போசிஸ் நிறுவனத்திலும் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர்.

டேட்டிங் செயலி மூலம் செல்போனில் 'டேட்டிங்' செயலி வழியாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் 'டேட்டிங்' சென்றனர். இந்த பழக்கம் காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் 2 வீட்டினருக்கும் தெரிய வந்தது.

நடத்தையில் சந்தேகம்

அவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர். 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்களுக்கு இடையே நடத்தை சந்தேகத்தால் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

ஷூபம் நடத்தையில் கோமல் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தார். சம்பவத்தன்று இரவு ஷுபம் கல்பாண்டே, கோமல் தஹாலே ஆகிய 2 பேரும் நண்பர்களுடன் ஒரு ஓட்டலில் இரவு சாப்பிட்டு விட்டு, நள்ளிரவு 12 மணி அளவில் ஹிஞ்சவாடி பகுதியில் உள்ள கோமல் தஹாலே தங்கி இருக்கும் விடுதியில் உள்ள அறைக்கு திரும்பினர்.

அங்கு இருவருக்கும் இடையே நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென்று வாக்கு வாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஷூபம் கல் பாண்டே கோமல் தஹா லேவை சரமாரியாக தாக்கினார்.

விடிய விடிய உடல் அருகே இதில் கோமல் தஹாலே மயங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். இதனை தொடர்ந்து ஷூபம் உடனடியாக போலீசுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து ஷூபம் கல்பாண்டே விடிய விடிய காதலி கோமல் தஹாலே உடல் அருகே அமர்ந்து அழுதுகொண்டே இருந்தார்.

காலை சுமார் 6:30 மணியளவில், அவரே போலீசுக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்சை அழைத்து வருமாறு கூறினார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காதலன் கைது

கோமல் தஹாலேவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் காதலியை கொலை செய்ததை ஷூபம் ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. கோமலின் அறைத் தோழி மற்றும் விடுதியில் தங்கி இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X