கன்னித்தன்மையை பரிசோதிக்க மறுத்ததால் புனே பெண், தண்டியா நடன அரங்கிற்குள் நுழைய தடை

கன்னித்தன்மையை பரிசோதிக்க மறுத்ததால் புனே பெண், தண்டியா நடன் அரங்கிற்குள் நுழைய தடை விதிக்கபட்டு உள்ளது.
கன்னித்தன்மையை பரிசோதிக்க மறுத்ததால் புனே பெண், தண்டியா நடன அரங்கிற்குள் நுழைய தடை
Published on

மும்பை

புனேவை சார்ந்த பெண் ஒருவர் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை பரிசேதனைக்கு மறுத்ததால் அவரது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டார். மேலும் திங்கட்கிழமை நடைபெற்ற தண்டியா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டது. தற்போது அந்த பெண் பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் 8 பேருக்கு எதிராக மகாராஷ்டிரா ஆந்த்ராஷ்தா நிர்மோலன் சமிதி (MANS) உதவியுடன் புகார் அளித்து உள்ளார். சமூகப் புறக்கணிப்பு சட்டம், 2016 கீழ் போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த பெண் கஞ்சார்பேட் சமூகத்தைச் சேர்ந்தவர், அந்த சமூகத்தில் கன்னித்தன்மை பரிசோதனை செய்யும் பாரம்பரியத்தை கடைபிடித்து வந்தனர்.

ஆனால் சமூகத்தின் பாரம்பரியத்தை எதிர்த்ததற்காக சமூக உறுப்பினர்கள் சமூக பகிஷ்கரிப்பை எதிர்கொண்டனர். ஆனால் அந்த பெண்ணிற்கு அவரது கணவர் துணை நின்றார்.

இது குறித்து அந்த பெண் கூறியதாவது;-

நிகழ்ச்சி சாதாரணமாக தொடங்கியது. "ஆரம்பத்தில், எல்லாமே சாதாரணமாக இருந்தன, நான் 20 நிமிடங்கள் நடனம் ஆடினேன், ஆனால் பின்னர் அமைப்பாளர்கள் இசைக்குத் திரும்பினர். என் அம்மா என்னிடம் வந்து, வீட்டுக்கு வருமாறு கூறினார். அடுத்த நிகழ்சியில் சீருவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என கூறினார்கள். நான் என் தாயாரை பின் தொடர்ந்தேன் வீட்டிற்கு சென்றேன். நான் கிளம்பிய உடனே, கொண்டாட்டங்கள் மீண்டும் தொடங்கியது.

மகாராஷ்டிரா ஆந்த்ராஷ்தா நிர்மோலன் சமிதி நந்தினி ஜாதவ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஒரு தேவிக்கு பண்டிகை கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு பெண்ணுக்கு மரியாதை கொடுக்க தயாராக இல்லை இது யார் பேரில் குற்றம். இந்த மக்கள் இதில் இரட்டை நிலைபாட்டை கடைபிடிக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக சில கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை, அத்தகைய நடைமுறைகள் நிறுத்தப்படாது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com