

புதுடெல்லி,
பஞ்சாப்பில் முதல்-அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பஞ்சாப்பில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களில் வென்றது. இதனால் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக உள்ளது. வரும் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பகவந்த் மான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அக்கட்சியின் பஞ்சாப் மாநில தலைவரும், மக்களவை எம்.பி.யுமான பகவந்த்
தலைமையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.