பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல்வராக விரும்புகின்றனர்- அரவிந்த கெஜ்ரிவால்

பஞ்சாபின் நிலைமை மோசமாக உள்ளது. ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியாக விரும்புகின்றனர் என அரவிந்த கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல்வராக விரும்புகின்றனர்- அரவிந்த கெஜ்ரிவால்
Published on

சண்டிகர்:

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அடுத்த 5 மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினையால் ஆட்டம் கண்டுவருகிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதித்துள்ளது.

இன்று பஞ்சாப் மாநிலம் சென்ற டெல்லி முதல் மந்திரியும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .

அப்போது அவர் கூறியதாவது:-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர்.

ஆட்சியை மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியினர் அரசாங்கத்தை கேலி செய்கின்றனர். அதிகாரத்திற்காக மோசமான சண்டை நடக்கிறது. பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியாக விரும்புகின்றனர். பஞ்சாபின் நிலைமை மோசமாக உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி மட்டுமே மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. பஞ்சாபில் அடுத்ததாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும். பஞ்சாபின் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நாங்கள் செய்ய முடியாததை வாக்குறுதியாக அளிப்பதில்லை.

அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும். இதன்மூலம் மக்களுக்கு இலவச மற்றும் தரமான சுகாதாரத்தை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com