பஞ்சாப் இடைத்தேர்தல்: ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மொஹிந்தர் பகத் வெற்றி பெற்றார்.
பஞ்சாப் இடைத்தேர்தல்: ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி
Published on

சண்டிகார்,

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இந்த இடைத்தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மொஹிந்தர் பகத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் ஷீடல் அங்கூரல் மற்றும் காங்கிரஸ் சார்பில் சுரிந்தர் கவுர் களம் கண்டனர்.

இந்நிலையில், ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத் 55 ஆயிரத்து 246 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் 17ஆயிரத்து 921 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 37,325 ஆகும். அதேபோல காங்கிரஸ் வேட்பாளர் 16 ஆயிரத்து 757 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றார்.

கடந்த மார்ச் மாதம் ஜலந்தர் தொகுதி உறுப்பினர் ஷீடல் அங்கூரல் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com