பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் நாளை டெல்லி பயணம்

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தனது டெல்லி அரசுப் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை நேரில் சென்று பார்வையிடுகிறார்.
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் நாளை டெல்லி பயணம்
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆமோக வெற்றிப்பெற்ற ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றார். அதன்பிறகு, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை பஞ்சாப் அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

இதற்கிடையே, டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண பகவந்த் மான் மற்றும் பஞ்சாப் அமைச்சர்கள் வருகை தருவார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தனது அமைச்சரவை அமைச்சர்களுடன் நாளை டெல்லி அரசுப் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார். இவர்களுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துக் கொள்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com