பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது

பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான பிரனீத் கவுரிடம், ரூ.23 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- பிரனீத் கவுர் பாராளுமன்ற அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டிருந்த போது, அவரது செல்போனுக்கு சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது.

எதிர்முனையில் பேசிய நபர் தான் ஒரு வங்கி மேலாளர் எனவும் உங்களின் சம்பளத்தை கணக்கில் செலுத்த வங்கி கணக்கின் விவரத்தை அளிக்குமாறு கோரியுள்ளார். இதை நம்பிய பிரனீத் கவுர், வங்கி கணக்கு எண், ஏடி.எம் பாஸ்வேர்டு, சிவிசி எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை அளித்துள்ளார். வங்கி கணக்கு விவரங்களை வாங்கியதும் அழைப்பை அந்த நபர் துண்டித்து விட்டார்.

சிறிது நேரத்தில், பிரனித் கவுர் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் வந்தன. அதில், வங்கி கணக்கில் இருந்த ரூ.23 லட்சம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பதறிப்போன பிரனீத் கவுர், உடனடியாக புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து அழைப்பு வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து களத்தில் இறங்கிய போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com