பஞ்சாப்: காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ராகுல்காந்தி நாளை பொற்கோவிலில் வழிபாடு..!

காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 பேருடன், ராகுல்காந்தி நாளை பொற்கோவிலில் வழிபாடு நடத்த உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகார்,

காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (வியாழக்கிழமை) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு செல்கிறார்.

பஞ்சாப் காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 பேருடன் பொற்கோவிலுக்கு செல்கிறார். அங்கு வேட்பாளர்களுடன் வழிபாடு நடத்துகிறார். லங்கார் எனப்படும் அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்று சாப்பிடுகிறார். பின்னர், துர்கியானா கோவில், பகவான் வால்மீகி திராத் ஸ்தலத்திலும் ராகுல்காந்தி வழிபடுகிறார்.

அதைத்தொடர்ந்து, ஜலந்தர் நகருக்கு ராகுல்காந்தி செல்கிறார். அங்கு மாலையில் நடைபெறும் காணொலி வடிவிலான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நாளை இரவே அவர் டெல்லி திரும்புகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com