பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா வாபஸ்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா வாபஸ்
Published on

சண்டிகார்,

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து கடந்த 2004ம் ஆண்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர், ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபோது பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து விட்டார்.

காங்கிரசில் இணைந்த பின்பு முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குடன் மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த நிலையில், திடீரென முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததுடன், கட்சியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திடீரென நவ்ஜோத் சிங் சித்து விலகினார்.

இதனைத்தொடர்ந்து, சித்துவை காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்ய முயற்சி செய்தது. இதனால், டெல்லிக்கு சென்ற சித்து, ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் (பொறுப்பு) கே.சி. வேணுகோபாலை சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்து, நான் காங்கிரஸ் தலைவராக தொடர்வேன். எனக்கு இருந்த அனைத்து பிரச்சினைகளும் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டு விட்டன என கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக ராஜினாமாவை அவர் வாபஸ் பெறுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com