பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

117 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

117 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10 முதல் 16 வரை கடைபிடிக்கப்படுகிறது.

குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி சீக்கியர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் பகுதிக்கு புனிதப்பயணம் மேற்கொள்வர்கள். அங்கு உள்ள குரு ரவிதாஸ் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

தற்போது, சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சீக்கியர்கள் தங்களின் புனித பயணமான குரு ரவிதாஸ் நினைவிடத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்படலாம். தேர்தலில் வாக்களிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கையும் குறையலாம். இதனால், தேர்தலை தள்ளிவைக்கக்கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடிதம் எழுதின.

இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பிறகு பஞ்சாப் தேர்தல் தேதியை 20 ஆம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com