

சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள தயாள்புரா மிர்சா கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி குர்லாப் சிங் (வயது 22).
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்ற குர்லாப் சிங், கடந்த வெள்ளிக்கிழமை சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் விஷம் அருந்தினார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். விவசாயி தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.