ஹர்பஜன் சிங் எம்.பி.க்கு போலீஸ் பாதுகாப்பு நீக்கம் - பஞ்சாப் அரசு நடவடிக்கை

ஹர்பஜன்சிங்குக்கான பாதுகாப்பை மாநில அரசு விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
ஹர்பஜன் சிங் எம்.பி.க்கு போலீஸ் பாதுகாப்பு நீக்கம் - பஞ்சாப் அரசு நடவடிக்கை
Published on

சண்டிகர்,

முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி. ஆனார். இந்த நிலை யில் சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.பி.க்கள் கட்சி தாவி பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களில் ஹர்பஜன்சிங்கும் ஒருவர். இதை கண்டித்து எம்.பி.க்களின் வீடுகள் முன்பு ஆம் ஆத்மி கட்சி தொண்டர் கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்க ளின் வீட்டு சுவர்களில் துரோகிகள் என்று பெயிண்டு மூலம் எழுதினர்.

இந்த நிலையில் ஹர்பஜன்சிங்குக்கான பாதுகாப்பை மாநில அரசு விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. சுமார் 10 காவ லர்களை கொண்ட பாதுகாப்பு ஹர்பஜன்சிங்குக்கு வழங்கப்பட்டு வந்தது. அந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பதற்ற நிலை காரணமாக அவரது வீட்டு முன்பு ஆயுதப்படை போலீசார் நேற்று பாது காப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com