பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா

தமிழகத்தின் முன்னாள் கவர்னராக இருந்தவர் பன்வாரிலால் புரோகித் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பஞ்சாப் கவர்னர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் இந்த திடீர் முடிவை எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் கவர்னராக இருந்தவர் பன்வாரிலால் புரோகித் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com