

பதன்கோட்,
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள மமன் ராணுவ தளம் அருகே கிடந்த பையில் 3 ராணுவ உடைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பதன்கோட் விமானப்படை தளத்தை சுற்றிலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு வேறு எதுவும் உள்ளதா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மர்மபை குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.