‘டாஸ்’ போட்டு பார்த்து விரிவுரையாளரை தேர்வு செய்த பஞ்சாப் அமைச்சர்

பஞ்சாப்பில் ஒரே தகுதி உடைய 2 பேர் விரிவுரையாளர் பணிக்கு போட்டி போட்டதால் ”டாஸ்” போட்டுப் பார்த்து மந்திரி பணி நியமனம் வழங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
‘டாஸ்’ போட்டு பார்த்து விரிவுரையாளரை தேர்வு செய்த பஞ்சாப் அமைச்சர்
Published on

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை தேர்வு செய்ய அம்மாநில தேர்வாணையம் தேர்வு நடத்தியிருந்தது. தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்து கொண்டவர்களில் 37 பேர் தேர்வாகினர். இதில் பாட்டியாலாவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரே பதவிக்கு இருவர் தேர்வாகிருந்தனர்.

அதில் ஒருவர் அதிக மதிப்பெண் பெற்றவராகவும்,மற்றொருவர் அதிக ஆண்டுகள் பயிற்சி பெற்றவராகவும் இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் குழம்பி போன பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் சரண்ஜித் சிங் வினோதமான முறையில் நாணயத்தை சுண்டி விட்டு டாஸ் போட்டு பார்த்துள்ளார். இந்த காட்சிகள், உள்ளூர் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இந்த விவகாரத்தால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, விளக்கம் அளித்துள்ள அரசு, விரிவுரையாளர் நியமனத்தில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் நோக்கத்திலேயே இவ்வாறு நியமனம் மேற்கொள்ளப்பட்டதாகவும் விரிவுரையாளர்களில் இருவரின் ஒப்புதலுக்கு பிறகே டாஸ் போட்டு நியமனம் செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், தனது செயலை மந்திரி சரண்ஜித் சிங் நியாயப்படுத்தி உள்ளார். முந்தைய பாரதீய ஜனதா, சிரோமணி அகாலி தள கூட்டணி ஆட்சியில் பணி நியமனத்தில் லஞ்சம் தாண்டவம் ஆடியது. நான் அதை ஒழித்து உள்ளேன் என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com