அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் மந்திரி திடீர் ராஜினாமா

டெண்டர் விவகாரத்தில் ரந்தாவாவை மந்திரி வற்புறுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் மந்திரி திடீர் ராஜினாமா
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் உள்ள கிடங்கு கழகத்தின் மாவட்ட மேலாளரான ககன் தீப் சிங் ரந்தா நேற்று முன் தினம் இரவு அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பாக வெளியிட்ட வீடியோவில் தனது இந்த விபரீத முடிவுக்கு மந்திரி லால்ஜி சிங் புல்லர் காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

மனதை உலுக்கும் இந்த 12 வினாடி வீடியோ பஞ்சாப் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில், தனது மன உளைச்சலுக்கும் மரணத்திற்கும் சில தனிநபர்களே காரணம் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக மந்திரி லால்ஜித் சிங் புல்லரின் பெயரை நேரடியாக குறிப்பிட்டார். இந்த வீடியோ பஞ்சாப் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

இதற்கு காரணமான மந்திரி லால்ஜித் சிங் புல்லரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதனை தொடர்ந்து உர்ய விசாரணை நடத்துமாறு முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமைசெயலாளர் கே.ஏ.பி. சின்ஹாவுக்கு உத்தரவிட்டார்.

இந்த சூழலில் போக்குவரத்துறை மந்திரி லால்ஜித் சிங் புல்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com