இறந்தவரின் அஸ்தியை கரைக்க சென்றபோது ஜீப்பும் லாரியும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான ஜீப்பில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர்.
இறந்தவரின் அஸ்தியை கரைக்க சென்றபோது ஜீப்பும் லாரியும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
Published on

சண்டிகர்,

இறந்தவரின் அஸ்தியைஆறுகள், கடல்கள் அல்லது புனித நதிகளில் கரைப்பது நமது கலாச்சாரத்தின் முக்கிய சடங்காகும். இதனால் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்து, அவர்கள் நற்கதியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

இந்தநிலையில், பஞ்சாபில் இறந்தவரின் அஸ்தியைக் கரைக்க ஜீப்பில் சென்றபோது, லாரியுடன் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான ஜீப்பில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் படுகாயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com