

அமிர்தசர்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் சவிந்தா தேவி என்ற பகுதியில் போலீசார் சொத்து தகராறு ஒன்றில் ஒருவரை பற்றி விசாரிக்க சென்றனர். அங்கு அவர் இல்லை அவரது மகன் - மருமகள் மட்டும் இருந்து உள்ளனர். இதனால் போலீசார் மகனை இழுத்து செல்ல முயன்று உள்ளனர். இதற்கு மருமகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் ஜீப்பின் மேல் கட்டிவைத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். போலீஸ் ஜீப் வேகமாக சென்றதால் பெண் கீழே விழுத்து உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பெண் உடனடியாக அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர் பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி உள்ளனர்.