பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
Published on

அமிர்தசரஸ்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

அதேவேளையில், காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை இந்தக் கூட்டணி அளிக்கும் எனத்தெரிகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கியுள்ளது.

பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், 86 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதில் முதல் மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதேபோல், , மோகா தொகுதியில் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் போட்டியிட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com