பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 2,634 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 39 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இன்று புதிதாக 2,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாபில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,276 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் இன்று மேலும் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,474 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

பஞ்சாபில் தற்போது 20,522 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 1,93,280 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பஞ்சாபில் பரவி வரும் கொரோனா வைரசின் மரபணுக்கள் பரிசோதிக்கப்பட்டதில், அவை இங்கிலாந்தில் உற்பத்தியான பி-117 ரக உருமாறிய கொரோனா என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ்களிலேயே இந்த வகை தெற்றுதான் மிக வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com