பஞ்சாப் மாநிலத்தில் இன்று புதிதாக 3,019 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 51 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தில் இன்று புதிதாக 3,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, பஞ்சாப் மாநிலத்தில் இன்று மேலும் 3,019 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,51,460 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,083 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,955 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,19,063 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் தற்போது 25,314 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com