

சண்டிகர்,
பஞ்சாப்பில் சுற்றுலா பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில் இன்று 2 சுற்றுலா பஸ்கள் சென்றுகொண்டிருந்தன. இந்த பஸ்களிலும் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் அவர்கள் அனைவரும் ஆன்மிக சுற்றுலாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விபத்து - 4 பேர் பலி
இந்நிலையில், தரன் தாரன் மாவட்டத்தின் நவ்ஷிரா பனுவன் பகுதியில் உள்ள சாலையில் இன்று சுற்றுலா பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மற்றொரு சுற்றுலா பஸ் மீது இந்த பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.